நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய விவகாரம் : வேலைஇழக்கும் நிலையில் 30 லட்சம் இந்தியர்கள் ?

BJP India Saudi Arabia
By Irumporai Jun 06, 2022 09:01 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் சர்ச்சை கருத்தால் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய விவகாரம் :  வேலைஇழக்கும் நிலையில் 30 லட்சம்  இந்தியர்கள் ? | Sheikh Sacks Indian Over Nupur Sharma Prophet

நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. நபிகள் குறித்து இழிவாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் இந்த நிலையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்திய நிலையில், நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கி பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது.

அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது பாஜக .

இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன.

கேள்விக்குறியாகும் இந்தியர்களின் வாழ்க்கை

நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபையின் பொது செயலாளர் நயீஃப் பலாஹ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் இந்த விவகாரம் மதம் சார்ந்த விதத்தில் மட்டும் அல்லாமல் அரபு தேசங்களில் வேலை பார்க்கும் பல்வேறு இந்தியர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் உள்ளது.

ஆம், நுபுர் சர்மாவின் இந்த கருத்து மற்றும் அதற்கான எதிர்வினைகள் காரணமாக அங்கு இருக்கும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது பாதிக்கப்படும் இந்தியர்கள் முக்கியமாக அரபு நாடுகளில் தென்னிந்தியர்கள் பலர் வேலை செய்கின்றார்கள் .

சிறிய லெவல் வேலைகள் தொடங்கி உயர் பதவிகளிலும் கூட தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த 35 லட்சம் பேர் அரபு நாடுகளில்தான் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கத்தார், சவூதி, ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் பலர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த பலர் அரபு நாடுகளில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் நாட்டில் இஸ்லாமியர்களை அவமதிக்கிறார்கள். எங்கள் நாட்டில் உங்களுக்கு வேலை கிடையாது என்று இந்தியர்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது அதாவது காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தினை நீக்கிய போது, ஹிஜாப் விவகாரம் என இந்திய இஸ்லாமியர்களின் தீவிர வெறுப்பினை ஆளும் பாஜக அரசு சம்பாத்தித்து வருகிறது.

தற்போது நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசிய பாஜக செய்திதொடர்பாளரின் பேச்சினால் அரபு நாடுகளில் இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி இந்துக்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல காலமாக அரபு நாடுகளில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் இவர்கள், நுபுர் சர்மா போன்றவர்களின் ஆணவ பேச்சால் மீண்டும் வேலையை இழந்து நாட்டிற்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை இழக்கும் நிலையில் 30 லட்சம் இந்தியர்கள்

இந்த நிலையில்தான் கத்தாரை சேர்ந்த ஷேக் ஒருவர் இந்தியரை வேலையை விட்டு அனுப்பிவிட்டதாக கூறி உள்ளார். அதில், இந்தியாவை சேர்ந்த கார்பெண்டர் ஒருவர் என்னுடைய ஸ்பான்சர்ஷிப்பில் கத்தாரில் வேலை செய்து வந்தார். அவர் பிரதமர் மோடியின் மதத்தை சேர்ந்தவர். இந்தியாவில் தற்போது விடுப்பில் இருக்கிறார்.

நபி அவமன்படுத்தப்பட்டதால், அவரை மீண்டும் வேளைக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவரை கடவுள் காப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு கடவுள் அமைதியை தரட்டும், என்று குறிப்பிட்டுள்ளார். 30 லட்சம் இந்தியர்கள் உள்ள அரபு தேசத்தில்  இந்த பணி நீக்கம் இந்திய பணியாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள், சவூதி அரேபியாவில் 1.54 மில்லியன் இந்தியர்களும், குவைத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் வெவ்வேறு திறன்களில் வேலைகளுக்காக  வாழ்கின்றனர்.

சிக்கலில் இந்தியர்கள்

தற்போது இந்தியாவில் பரவி வரும் முஸ்லிம்கள்  மீதான பரவலான வெறுப்பை உடனடியாக சரிசெய்யாவிட்டால் அரபு தேசங்களில் வாழும் இந்தியர்கள் சிக்கலில் சிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதர்களின் வாழ்க்கையில் ‘’ மதம்" என்பது ஒரு தடைக்கல் தான் மதம் கொண்ட யானையை அடக்கியவன் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்கள் மதம் என்னும் போர்வைக்குள் தங்களை மறைத்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள் .

இந்த விவகாரத்தில் இந்திய அரசும்  பிரதமர் மோடியும் தலையிட்டு பிரச்சினை மேலும் பெரிதாக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு

நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து - இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!