திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல...ஊழல் ஆதாரங்களை வெளியிட உள்ளோம் - அண்ணாமலை..!
M K Stalin
K. Annamalai
By Thahir
திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல என தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4 ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறினார்.
ஊழல் பட்டியலை வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும் என்ற அவர் திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல என்றார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை.அவர் முழுவதும் படிக்கவிலலை என்றார்.