2047ல் இந்தியா வளர்ந்த நாடு; அதைப் பேசுறது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன் இப்படி சொல்லிட்டாரே..
இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது குறித்து ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர் ரகுராம் ராஜன். மோடி அரசின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சனம் செய்தவர்.
தற்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசியுள்ள ரகுராம் ராஜன், நாட்டில் நிலவும் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்னைகளை தீர்த்தால்தான் அதன் வலிமையை ஏற்படுத்த முடியும். நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்துவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
இந்தியா வளர்ச்சி
உழைக்கும் வர்க்கத்தின் திறனையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. மிகப் பெரிதாக சாதித்து விட்டதாக நினைப்பது இந்தியா செய்யும் மிகப் பெரிய தவறு. அந்த சாதனையை எட்டுவதற்கு நாம் இன்னும் பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டு வரை இந்தியா வளர்ச்சியடைந்த பொருளாதார நிலையை அடைய முடியாது.
உங்கள் குழந்தைகள் நல்ல தரமான கல்வியைப் பெறாதவரையும், படிப்பை கைவிடும் சதவீதம் அதிகமாக இருக்கும்வரையிலும் இந்த இலக்கை அடைவதாக நினைப்பது முட்டாள்தனம். நம்மிடம் உழைக்கும் வர்க்கம் அதிகரித்து வருகிறது.
ஆனால் நல்ல வேலை கிடைத்தால்தான் இது பலன் தரும். என்னைப் பொருத்தவரை இதுதான் நாம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாகும். நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறை நமக்குத் தேவை எனத் தெரிவித்துள்ளார்.