?LIVE: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை!
பிரதமர் நரேந்திர மோடியின், 2வது கால அரசின் 2வது இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப்.1,2024) மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார்.
budget 2024
இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
2024 மக்களவை தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த இடைக்கால பட்ஜெட் வெகுஜன எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2027க்குள் நனவாகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்.
ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது; முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள். ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில், 3 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளாக மாற்றப்படும்.
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
லட்சத்தீவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ₹1.2 லட்சம் கோடி வழங்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.
நேரடி மற்றும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.