இது என்னோட உத்தரவாதம் - 47- இல் இந்தியா வளர்ந்த நாடாகும் - பிரதமர் மோடி உறுதி..!!

Narendra Modi Gujarat Indian rupee
By Karthick Jan 10, 2024 12:38 PM GMT
Report

நடைபெற்று வரும் குஜராத் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Vibrant Gujarat

இன்று குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உத்வேக உச்சி மாநாடு 2024-ஆம் ஆண்டு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டை நாட்டின் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

 india-will-be-3rd-biggest-financial-by-2047-modi

இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அரசின் பொறுப்பு

இந்த மாநாட்டில், பிரதமர் மோடியின் சிறப்புரைகள் வருமாறு,

இன்று உலகில் பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் நாடு இந்தியா. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 11வது இடத்தில் இருந்தது இந்தியாவின் பொருளாதாரம். வரும் ஆண்டுகளில் உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்று இருக்கும்.

முரசொலி நிலம் வழக்கு: விசாரணையை தள்ளிப்போட திமுக முயற்சிக்க வேண்டாம் - அண்ணாமலை!

முரசொலி நிலம் வழக்கு: விசாரணையை தள்ளிப்போட திமுக முயற்சிக்க வேண்டாம் - அண்ணாமலை!

நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், அது நடந்தே தீரும். நாட்டின் இந்த வளர்ச்சிக்கு பின்னால் கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் நாம் கவனம் செலுத்தியது ஒரு பெரிய காரணம். இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்புகளில் பில்லியன் டாலர்களில் புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா ஸ்திரத்தன்மையுடன் இருப்பதை தான் உலகம் உற்று நோக்கி வருகிறது.

india-will-be-3rd-biggest-financial-by-2047-modi

அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனது இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.

india-will-be-3rd-biggest-financial-by-2047-modi

இந்த 25 ஆண்டுகாலம் இந்தியாவின் அமிர்த காலமாகும். இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் குஜராத் உலக உச்சி மாநாடு இதுவாகும். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகளாக இருப்பார்கள்.