முரசொலி நிலம் வழக்கு: விசாரணையை தள்ளிப்போட திமுக முயற்சிக்க வேண்டாம் - அண்ணாமலை!

Tamil nadu DMK BJP K. Annamalai
By Jiyath Jan 10, 2024 07:11 AM GMT
Report

பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.

முரசொலி நிலம் வழக்கு: விசாரணையை தள்ளிப்போட திமுக முயற்சிக்க வேண்டாம் - அண்ணாமலை! | Bjp Annamalai X Post About Murasoli Land Case

பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

சட்டப்போராட்டம் தொடரும்

இது குறித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கக் கோரி, கடந்த 2019 ஆம் ஆண்டு,தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் திரு. ராம ஸ்ரீனிவாசன்அவர்கள் முதல் புகார்தாரராகவும்,

முரசொலி நிலம் வழக்கு: விசாரணையை தள்ளிப்போட திமுக முயற்சிக்க வேண்டாம் - அண்ணாமலை! | Bjp Annamalai X Post About Murasoli Land Case

தமிழக பாஜக மாநில பட்டியல் அணித் தலைவர் திரு. தடா.பெரியசாமிஅவர்கள் இரண்டாம் புகார்தாரராகவும் தொடர்ந்த வழக்கில், பட்டியலின ஆணையம் விசாரிக்கத் தடை கோரி திமுக தொடர்ந்த மனு, இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதியதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளது.

திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்.