திராவிட மாடல் சோறு போடாது..ஆட்சியை கவிழ்க்க போறது செந்தில் பாலாஜிதான் - திமுகவை சீண்டிய ராதாரவி!

V. Senthil Balaji DMK BJP K. Annamalai
By Sumathi Jul 05, 2022 11:23 AM GMT
Report

பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க வேண்டும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்க வேண்டும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை

உண்ணாவிரத போராட்டம்

திமுக நிறைவேற்ற வேண்டும் என பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கலந்து கொண்ட ராதாரவி மேடையில் காரசாரமாக உரையாற்றினார்.

annamalai

அப்போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை திமுக அமைச்சர்கள் வாடா போடா என விமர்சிக்கிறார்கள்.

திமுக

அப்படி யாராவது விமர்சித்தால், அது குறித்து பாஜகவினர் கவலைப்படத் தேவையில்லை, கடவுள் முருகனையே டேய் முருகா என்று ஒருமையில் தான் அழைக்கிறார்கள்.

senthil balaji

அதுபோல அண்ணாமலையையும் கடவுளாக எண்ணுவதால் தான் சில அமைச்சர்கள் வாடா போடா என்று கூப்பிடுகிறார்கள். அண்ணாமலையை திட்டினால் தான் திமுக அமைச்சர்களின் பதவி நிலைக்கும்,

 பாஜக

உண்மையிலேயே இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாவம், அவருடைய வீட்டிலேயே பல பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணியில் பல கட்சிகளை சேர்க்க வேண்டிய அவசியமில்லை,

இப்போது இருக்கிற ஆட்களுக்கு தேர்தலில் சீட் கிடைப்பது கடினமாக உள்ளது. மொத்தத்தில் அண்ணாமலையை வளர்த்துவிட்டது திமுகதான், திமுக பேசுகிற இந்த திராவிடம் மாடல் ஒருபோதும் சோறு போடாது.

ஆட்சி மாற்றம்

பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்றார்கள், ஆனால் அது எல்லா பேருந்துகளிலும் இல்லை, ஒயிட் போர்டு பேருந்துக்கு காத்திருந்து காத்திருந்து பெண்களின் கால்கள் வீங்கிப் போனது தான் மிச்சம்.

அண்ணாமலை பழைய ஆளாக மாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள், பாஷை தெரியாத கர்நாடகாவில் லேயே கம்பு விட்டு ஆடியவர் அண்ணாமலை, கி வீரமணி இருக்குமிடம் உருப்படாது, விரைவில் மகாராஷ்டிராவை போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்,

தேய்த்து பார்த்தும் தேறவில்லை

அதற்கு செந்தில்பாலாஜிதான் காரணமாக இருப்பார். திமுகவில் அமைச்சர் பதவிக்கு கூட ஆட்கள் இல்லை, அனைவரும் அதிமுகவில் இருந்து போனவர்கள்தான் அங்கு பெரும்பாலும் அமைச்சர்களாக உள்ளனர்.

அமைச்சர் பதவி தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூட திமுக அழைப்பு விடுத்திருக்கும், நான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என பலரையும் பார்த்துள்ளேன்.

ஆனால் அண்ணாமலையை போல பேச்சு திறமை யாருக்கும் இல்லை, நான் பாஜகவில் 5 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சேர்ந்தேன் என்று பலர் கூறுகிறார்கள், இதோ இங்கு தேய்த்து தேய்த்து பார்த்தும் எதுவும் தேறவில்லை என பேசியுள்ளார்.  

சவால் விட்டீங்களே செஞ்சீங்களா? காலத்தை ஓட்டும் திமுக - சாடிய அண்ணாமலை!