அதிமுக பிரிவினைக்குள் ஆதாயம் தேடுகிறதா பாஜக?

Thol. Thirumavalavan AIADMK BJP India
By Sumathi Jun 27, 2022 06:34 PM GMT
Report

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவராக, கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, பாஜக தான் எதிர்க்கட்சி என, அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு அதிமுகவை விட, பாஜக தான் அதிகமாக குரல் கொடுத்து வருவதாகவும் அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, பாஜக என்ற நிலையில் தான் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து இவ்வாறு கருத்துத் தெரிவித்து வருவது அதிமுக மூத்தத் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில்,

இந்த பிரிவினைக்குள் பாஜக இடம்பெற பார்க்கிறதா என விசிக சங்கத் தமிழன் பேட்டியுளித்துள்ளார். அந்த நேர்காணல் இதோ...