ரச்சிதா போட்ட பதிவு; அவ்வளவு டார்ச்சர் செய்தாரா தினேஷ்? ரசிகர்கள் ஷாக்!

Dinesh Rachitha Mahalakshmi
By Sumathi Jan 18, 2024 02:30 PM GMT
Report

நடிகை ரச்சிதா பகிர்ந்த பதிவொன்று வைரலாகி வருகிறது.

நடிகை ரச்சிதா

விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.

rachitha-mahalakshmi

சமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து, அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்.

உனக்கு இனி நான் மட்டும் தான்.. கைகோர்த்து நிற்கும் நடிகை ரச்சிதா - வைரல்!

உனக்கு இனி நான் மட்டும் தான்.. கைகோர்த்து நிற்கும் நடிகை ரச்சிதா - வைரல்!

அதிர்ச்சி பதிவு

அவரைத் தொடர்ந்து, அவரது கணவர் தினேஷும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டார். அதில், நடிகை ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸுக்கு பிறகு அதில் மாற்றம் வரலாம் என தினேஷ் தெரிவித்திருந்தார்.

ரச்சிதா போட்ட பதிவு; அவ்வளவு டார்ச்சர் செய்தாரா தினேஷ்? ரசிகர்கள் ஷாக்! | Rachitha Mahalakshmi Shock Post About Dinesh

இந்நிலையில், 'புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ் நோ' என குறிப்பிட்டு இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரி ஒன்றை ரச்சிதா பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும், அந்த அளவிற்கு தினேஷ் ரச்சிதாவிடம் நடந்துக் கொண்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.