வாழ்க்கையில் பூகம்பம் - முதல்முறை மனைவி ரச்சிதா பிரிவு குறித்து மனம் திறந்த தினேஷ்!
மனைவி ரச்சிதா குறித்து தினேஷ் முதல்முறை மனம் திறந்துள்ளார்.
தினேஷ்
விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.
சமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து, அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்.
பிக்பாஸ் 7
அவரைத் தொடர்ந்து தற்போது அவரது கணவர் தினேஷும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், போட்டியாளர்களுக்கு ’உங்கள் வாழ்க்கையில் ஒரு பூகம்பம்’ என்ற ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பேசிய தினேஷ் ’நானும் என் மனைவியையும் வாழ்க்கையில் பிரிந்தோம். எங்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தோம், அதை இப்போதும் நான் எதிர்கொண்டு தான் இருக்கின்றேன்’எனத் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக தினேஷ் தனது மனைவி ரச்சிதா குறித்து கூறியதையடுத்து இன்றைய எபிசோட் ரசிகர்களிடையே எதிர்பார்பபை பெற்றுள்ளது.