தோனி உடன் பிரேக் அப் - திருமணமே செய்யாமல் இருக்கும் தமிழ் நடிகை
நடிகை ராய் லட்சுமி திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
நடிகை ராய் லட்சுமி
2008ல் வெளியான தாம் தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ராய் லட்சுமி. அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் வில்லியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீல் சேரில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே இவர் நடிக்க இருந்த பல படங்களில் வாய்ப்பு நழுவியதாக கூறப்பட்டது.
தோனியுடன் உறவு
தற்போது மீண்டும் உடல்நலம் தேறி, திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியுடன் டேட்டிங் செய்ததாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த உறவு திருமணம் வரை செல்லாமல் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். மேலும் தோனியுடன் உறவில் இருந்தது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராய் லட்சுமி இன்றுவரை திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.