கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான் - பிசிசிஐ முடிவு?
மூத்த வீரர் ஒருவரின் கேப்டன் விருப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் பதவி
இந்திய டெஸ்ட் அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக இருப்பதற்கு பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சுப்மன் கில்?
இதற்கிடையில் மூத்த வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பதற்கு விருப்பம் தெரிவித்தார் எனவும் ஆனால் அதை பிசிசிஐ நிராகரித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. அந்த மூத்த வீரர் விராட் கோலி, பும்ரா மற்றும் கேஎல்ராகுல் என மூவரில் ஒருவராக இருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பும்ரா காயமடைய அதிக வாய்ப்புகள் இருப்பதால், அவருக்கு ஓய்வு தரப்பட வேண்டும் என்பதால், அவருக்கு கேப்டன் பதவி மற்றும் துணை கேப்டன் பதவி தருவதும் சரியாக இருக்காது என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே, இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரர்களில் ஒருவரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு சுப்மன் கில் தகுதியானவராக இருப்பார் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.