போட்டி முடிஞ்சதும் தோனி என்னை எப்படி அழைத்தார் தெரியுமா? ஆயுஷ் மாத்ரே
தோனி தன்னை சாம்பியன் அழைத்ததாக ஆயுஷ் மாத்ரே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே
ஐபிஎல் தொடரில் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதில் சென்னை தரப்பில் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடினார்.
சாம்பியன்
இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் தன்னை நேரில் அழைத்த தோனி எவ்வாறு அழைத்தார் என்பது குறித்து ஆயுஷ் மாத்ரே மகிழ்ச்சி தெரிவித்தார்.
Truly a ch𝘼𝙈pion! 🦁#RCBvCSK #WhistlePodu pic.twitter.com/0FxmE6lQv9
— Chennai Super Kings (@ChennaiIPL) May 4, 2025
இதுகுறித்து அவர் பேசுகையில், போட்டி முடிந்த பின்னர் என்னை மகிபாய் 'சாம்பியன்' என்று அழைத்தார். ஆனால் அவர் ஏன் என்னை அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் அப்படி என்னை அழைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.