கல்லறைகளில் தோன்றிய QRகுறியீடு..ஸ்கேன் செய்யும்போது நடந்த பயங்கரம் - திடுக்கிடும் சம்பவம்!
கல்லறைகளில் திடீரென தோன்றிய QRகுறியீடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கல்லறை
ஜெர்மனியின் மியூனிக் நகரில் கல்லறைகளில் கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் QR குறியீடுகளுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட சிலர் அச்சம் அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பழைய மற்றும் புதிய கல்லறைகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மர சிலுவைகள் நிறுவப்பட்ட கல்லறைகளிலும் இந்த ஸ்டிக்கர்கள் உள்ளன.
மேலும் கல்லறைகளில் ஒட்டப்பட்ட 5×3.5-சென்டிமீட்டர் QRகுறியீடுகளுடன் கூடிய ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்யும்போது கல்லறையில் புதைக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் கல்லறையில் அதன் இருப்பிடம் காட்டப்பட்டது.
QRகுறியீடு
இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்து யாராவது ஸ்டிக்கர்களை ஒட்டுவதைப் பார்த்தால், அந்தந்த கல்லறை நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கல்லறைகளிலிருந்து ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டபோது, கற்கள் ஓரளவு சேதமடைந்து நிறமாற்றம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஸ்டிக்கர்கள் எங்கிருந்து வந்தன அல்லது ஏன் இங்கு ஒட்டப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.