5 மாதங்களுக்கு பின் நஸ்ரல்லா இறுதி சடங்கு; 90 நாடுகளை சார்ந்தோர் பங்கேற்பு - யார் இவர்?

Israel Lebanon Israel-Hamas War
By Sumathi Feb 24, 2025 04:22 AM GMT
Report

5 மாதங்களுக்கு பின்பு நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நடைபெற்றது.

நஸ்ரல்லா

2023ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

nasrallah funeral

தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது. இதில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது.

அதிக மக்கள் தொகை உள்ள நகரம் எது தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்!

அதிக மக்கள் தொகை உள்ள நகரம் எது தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்!

இறுதி சடங்கு

இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்து கொன்றது. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின்னர், லெபனானில் உள்ள மிக பெரிய விளையாட்டு திடலில் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கடும் குளிரிலும் நடந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று கலந்து கொண்டனர்.

10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்காக 90 நாடுகளை சேர்ந்த மக்கள் லெபனானுக்கு வந்துள்ளனர். அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இதுபற்றிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.