இனி.. ஈஸியா டிக்கெட் இப்படியே எடுக்கலாம் - தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய வசதி
ரயில் பயணத்தில் டிக்கெட் வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் வாங்குவதற்கான கட்டண முறையை தெற்கு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்வே அறிவிப்பு
செகந்திராபாத் கோட்டத்தின் கீழ் உள்ள 14 நிலையங்களில் அமைந்துள்ள 31 கவுண்டர்களில் இது செயல்படுத்தப்படுகிறது. இந்த QR குறியீடு மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் பெற போன்பே, கூகுள் பே, பிஎச்ஐஎம் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதன்மூலம், யில்நிலையங்களில் டிக்கெட்டுக்காக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாத சூழல் உருவாகியுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தின் போது உடனடியாக டிக்கெட் வாங்க ஏதுவாக அமைகிறது.