ஹோட்டலாக மாறப்போகும் ரயில் கோச்; இனி ஈசி தான் - தெற்கு ரயில்வே அதிரடி
சென்னையில் நான்கு இடங்களில் ரயில் கோச் உணவகங்கள் அமையவுள்ளது.
ரயில் கோச் உணவகம்
EMU ரயிலின் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் அக்டோபர் மாதத்திற்குள் உணவகமாக மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. ரயில் பெட்டியை புதுப்பித்து உணவகமாக மாற்றி அமைத்து புதுவித உணவு அனுபவத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தெற்கு ரயில்வே சார்பில் சுமார் 95 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதுகுறித்து கூறிய தெற்கு ரயில்வே அதிகாரிகள், ஒப்பந்தத்தை எடுத்த தனியார் நிறுவனத்திற்கு ரயில்வே சார்பில் செகண்ட் கிளாஸ் கோச் ஒன்று வழங்கப்படும். அது அந்த நிறுவனத்தின் யோசனைப்படி ஏசி உணவகமாக மாற்றி அமைக்கப்படும்.
தெற்கு ரயில்வே
பயணிகள் ரயில் ஏறுவதற்கு முன்பு அந்த உணவகத்தில் தங்களது உணவை சாப்பிட்டு செல்லலாம். இந்த ரயில் கோச் உணவகம் சென்னை சென்ட்ரல், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் மற்றும் பெரம்பூரிலும் நிறுவப்பட உள்ளது. ஏறத்தாழ 40 வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம்.
மேலும் அந்த உணவகத்தின் உள் கட்டமைப்பும் ரயில் வடிவத்தில் அமையப்படும். இந்த பெட்டியில் சமையலறை வசதியும் இருக்கும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக குறைந்த அளவிலான உணவகங்கள் மட்டுமே அமையப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.