புதின் சீக்கிரம் இறந்துருவாரு; ஜெலன்ஸ்கி உறுதி - ஏன் அவ்வாறு கூறினார்?
புதின் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜெலன்ஸ்கி கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் பேச்சுவார்த்தையில் உடனடி 30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "இப்போத சர்வதேச அரங்கில் ரஷ்யா தனித்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் புதினுக்கு அமெரிக்கா உதவக்கூடாது.
ஜெலன்ஸ்கி சர்ச்சை பேச்சு
அதுதான் மிகவும் முக்கியம். இது ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். உலகிற்கே மிகவும் ஆபத்தான தருணங்களில் ஒன்றாகும். எங்கு உயிரிழந்துவிடுவோமோ என்றும் புதின் அஞ்சுகிறார். அவர் விரைவில் இறந்துவிடுவார். அது தான் ஒரு உண்மை. அது நடந்தால் எல்லாமே ஓவர்.
அதேநேரம் இந்த இடத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவின் உதவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். புதினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது போன்ற தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், ஜெலன்ஸ்கி இப்படி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.