ட்ரம்ப்-க்கு எதிரான வழக்குகள்.. நீதிபதியை விமர்சிப்பவருக்கு ரூ.1 கோடி - எலான் மஸ்க்!

Donald Trump Elon Musk World
By Vidhya Senthil Mar 27, 2025 10:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்பவர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி வழங்கி வருகிறார்.

 வழக்குகள்

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது ட்ரம்ப் உடனான ரகசிய உறவு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் நடிகை ஸ்டார்மிக்கு ரூ.1 கோடியை வழங்கியதாக நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ட்ரம்ப்-க்கு எதிரான வழக்குகள்.. நீதிபதியை விமர்சிப்பவருக்கு ரூ.1 கோடி - எலான் மஸ்க்! | Elon Musk Funds People Who Criticize Judge

இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் விசாரனைக்கு வந்தது. அப்போது ட்ரம்ப் குற்றவாளிதான். எனினும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு அபராதமோ, தண்டனையோ விதிக்க விரும்பவில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

ரூ.1 கோடி

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜுன் மெர்சனுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் நீதிபதிகளின் வீடுகளுக்கு மர்ம பார்சல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

ட்ரம்ப்-க்கு எதிரான வழக்குகள்.. நீதிபதியை விமர்சிப்பவருக்கு ரூ.1 கோடி - எலான் மஸ்க்! | Elon Musk Funds People Who Criticize Judge

இந்த சூழலில் அதிபர் ட்ரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்கள், குழுக்களுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை அவர் ரூ.5.41 லட்சத்தை வழங்கியிருப்பதாகக் தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.