போப் பிரான்சிஸை சந்திக்க சென்ற மன்னர் சார்லஸ் - பக்கிங்ஹாம் அரண்மனை சொன்ன அதிர்ச்சி தகவல்!
போப் பிரான்சிஸை வாட்டிகனில் சந்திக்க இருந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியின் அரசுமுறை பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14-ந் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
88 வயதான போப் ஆண்டவர் நுரையீரல் தொற்று பிரச்சினையும், அனீமியா தொடர்புடைய பிளேட்லெட்டுகள் குறைந்ததன் காரணமாக போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் அறிவித்தது. தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், 38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். இந்த சுழலில் போப் பிரான்சிஸை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
பக்கிங்ஹாம் அரண்மனை
போப் பிரான்சிஸ் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில், மன்னர் மற்றும் ராணி ஆகியோர் போப்பாண்டவரைச் சந்திக்கும் முடிவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ ஆலோசனையின்படி, போப் பிரான்சிஸ் நீண்டகால ஓய்வு தேவைப்படும் நிலையில் உள்ளார். அவர் பூரணமாக குணமடைந்ததன் பின்னர் சந்திப்பு முன்னெடுக்கப்படும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.