முதல்ல விஷம், இப்போ சிறையில் மரணம்; பதில் சொல்லியே தீரணும் - நவ்லனி மனைவி
அலெக்ஸி நவல்னி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி புதின் குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.
அலெக்ஸி நவல்னி
மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு
அலெக்ஸி நவல்னி 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அதன்படி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறையில் வாக்கிங் சென்ற நவல்னி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாகவும்,
உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரஷ்ய சிறைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் அலெக்ஸே நவல்னி. எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்.
மனைவி குற்றச்சாட்டு
ரஷ்ய அரசின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்தினார். இதைப் புதினால் தாங்கிக்கொள்ள முடியாததால் அவரைச் சிறையில் அடைத்தார் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில், இவரது மரணம் தொடர்பாக பேசியுள்ள மனைவி யூலியா, "இந்த நேரத்தில் நான் எனது குழந்தைகளுடன் இருக்க வேண்டுமா இல்லை.
இங்கே வர வேண்டுமா என்பதில் குழப்பம் இருந்தது. ஆனால், நவல்னி இருந்தால் என்ன செய்வாரோ அதைச் செய்ய முடிவு செய்தேன். எனது கணவர் உயிரிழந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை.
ஒருவேளை அவர் உயிரிழந்து இருந்தால் அதற்குக் காரணமாக இருக்கும் புதின் அவரது நண்பர்கள், அவரது அரசு என அனைவரும் இந்த நாட்டிற்கும் எனது குடும்பத்திற்கும் பதில் சொல்லியே தீர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.