விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி - ரஷ்ய அதிபர் புதின் முக்கிய அறிவிப்பு!
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி குறித்த முக்கிய தகவலை அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
அதிபர் புதின்
மிகவும் அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றான புற்றுநோயை தடுக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், நிரந்தர தீர்வுக்கான ஆய்வில் இங்கிலாந்து-ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் இறங்கின.
இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வருங்காலத்திற்கான தொழில்நுட்ப மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அதில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் புதின்,
புற்றுநோய் தடுப்பூசி
"புதிய தலைமுறைக்கான புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் மிக அருகில் நெருங்கி விட்டோம். விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் தனிப்பட்ட சிகிச்சையின் முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து அறிமுகம் செய்யப்பட்டால் உலகின் முதல் புற்றுநோய்க்கான தடுப்பூசியாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.