இனி கவலை வேண்டாம்... கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே தடுப்பூசி!
பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கர்ப்பப்பை புற்றுநோய்
கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பொறுத்தவரை, இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இதுவரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனமும் இணைந்து இந்தத் தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் தடுப்பூசி
வெளிநாட்டு தடுப்பூசி போல் அல்லது, மக்களுக்கு ஏற்ற விலையில் வாங்கிக்கூடிய வகையில், `செர்வாவாக்’ (Cervavac) என்ற ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
மேலும், இந்தியாவில் 9 - 14 வயதிலிருக்கும் 5 கோடி சிறுமிகளுக்கு அரசு சார்பாக இது சிறப்பு விலையில் அளிக்கப்படும்; அதன் மூலம் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எதிர்காலத்தில் ஒழிக்கப்பட வாய்ப்பு உண்டாகும் என்று மருத்துவத் துறையின் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் இந்தத் தடுப்பூசி முக்கியத்துவம் பெறுகிறது.