ஒரே ஊசியை கொண்டு 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர் - அதிர்ச்சி சம்பவம்

By Nandhini Jul 28, 2022 11:12 AM GMT
Report

ஒரே ஊசியை கொண்டு 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவரால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

தடுப்பூசி போட்ட மருத்துவர்

மத்திய பிரதேசம், மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஜெயின் பப்ளிக் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

அப்போது, மருத்துவர் ஜிதேந்திரா என்பவர் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவர் ஜிதேந்திரா ஒரே ஊசியை கொண்டு அங்குள்ள 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்.

corona-vaccine-doctor

பெற்றோர்கள் கண்டனம்

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இது குறித்து அந்த மருத்துவரிடம் பெற்றோர்களும், மாணவர்களும் கேட்டதற்கு, தன் மேலதிகாரிகள் ஒரு சிரீஞ்ச் மட்டும் கொடுத்ததாகவும், அதைக் கொண்டே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டதாகவும் கூறினார்.

வழக்குப்பதிவு 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொர்பாக மருத்துவர் ஜிதேந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது, தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.