இந்தியாவில் முதல்முறை.. தரையிறங்கிய 'புஷ்பக்' - ISRO-வின் அடுத்த சாதனை!
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான ‘புஷ்பக்’ நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
புஷ்பக் ஏவுகணை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை (RLV-TD) புஷ்பக் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை விமானத்தைப் போல இறக்கைகள் உடையது. 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் சோதனையும், 2023-ம் ஆண்டு இரண்டாவது சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு சோதனை மூன்றாவது முறையாக சோதனை நடத்தப்பட்டது.
சோதனை வெற்றி
சினூக் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கிமீ உயரத்திற்கு ஏவுகணை கொண்டு சென்று, ஓடுதளத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து சரியான பாதையில் சென்று புஷ்பக் ஏவுகணை தரையிறங்கியது.
இதுகுறித்து இஸ்ரோ கூறுகையில் "மறுபயன்பாட்டு ஏவு வாகனமான புஷ்பக், சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பவும், சுற்றுப்பாதையில் இருந்து செயற்கைக்கோள்களை மீட்டெடுக்கவும் பயன்படும். மேலும், விண்வெளியில் குப்பையை குறைப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளது.