ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினர்,கலெக்டர் அஞ்சலி!
ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று 8வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
அப்துல் கலாம்
ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் காலம் என்ற முழுப் பெயர் கண்ட அப்துல் கலாம் ஆக்டொபர் 15 1932 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஒரு எளிய குடுடம்பத்தில் ஒரு படகுச் சொந்தக்காரர் ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார் பிறந்தார். அப்துல் கலாம் இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.பின்னர் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
பின்னர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) பணியாற்றினார். துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில் நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார்.
இவரின் செயலை பாராட்டி 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்றார் அப்துல் கலாம். 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார். பின்னர் 20002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 20002ல் பதவியேற்றார். குடியரசுத் தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.
மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். குழந்தைகள் என்றால் கலாமுக்கு அவ்வளவு பிடிக்கும். அனைத்து பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை சந்தித்தது அவர்களுக்கு அறிவுரைகளைக் கூறுவார். குடியரசுத் தலைவராக இல்லாத நாட்களிலும் இவர் அதைத் தொடர்ந்து செய்து வந்தார்.
இவ்வாறு அவரின் எளிய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015ல் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்தார். இன்று அவரின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப் படுகிறது.
நினைவுநாள் அனுசரிப்பு
இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் அருகேயுள்ள பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அவரின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் அப்துல் கலாமின் அன்னான் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெயுலாதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. கீதா ஜெயின், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோர் பங்கேற்றனர். அரசு சார்பில் அமைச்சர்கள், எமிஎல்ஏ. எம்பிக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.