மகளை கர்ப்பமாக்கிய தந்தை - தாயின் 2வது கணவன் வெறிச்செயல்!
இளம்பெண்ணை தாயின் 2வது கணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பஞ்சாப், முகந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 20 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் திடீரென உயிரிழந்துவிட்டார்.
அதன்பின், மகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் 50வயது நபரை 2வது திருமணம் செய்துள்ளார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, தாயின் இரண்டாவது கணவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து தாயிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணும் இதுகுறித்து தாயிடம் கூறாமல் இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அந்த நபர், பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இளம்பெண் கர்ப்பம்
ஒரு கட்டத்தில் இதனை தாங்கிக் கொள்ள முடியாத பெண், புரைன் என்ற கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய்மாமாவை தேடிச் சென்றுள்ளார். மேலும், அவரிடம் நடந்தவற்றை கூறி கதறியுள்ளார். அப்போது தான் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அதன்படி அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள இளம்பெண் மருத்துவ பரிசோதனையின் கீழ் உள்ளார்.