10ம் வகுப்பு படிக்கும் மகளை மிரட்டி 7 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - கொடூர சம்பவம்!

Tamil nadu Sexual harassment Crime
By Jiyath Aug 06, 2023 07:24 AM GMT
Report

மாணவியை பிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் 38 வயதான வினோத். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவன் மூலமாக 15 வயதில் 10ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.

10ம் வகுப்பு படிக்கும் மகளை மிரட்டி 7 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - கொடூர சம்பவம்! | Threatened And Molested For 7 Years Moms 2 Husband

இந்நிலையில் மாணவி மாயமாகியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வாலிபரின் சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றுள்ளனர். இருவரையும் கண்டு பிடித்து மீட்ட போலீசார் வாலிபர் மாணவியிடம் தவறாக ஏதும் நடந்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். அதில் மாணவியிடம் வாலிபர் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

பின்னர் மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த மாணவி கூறியதாவது 'அம்மாவின் இரண்டாவது கணவரான வினோத், கடந்த 7 ஆண்டுகளாக தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்' என்று போலீசாரிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் வீட்டில் இருக்க பிடிக்காமல் தான் கடிதம் எழுதிவிட்டு அந்த வாலிபருடன் சென்றதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு படிக்கும் மகளை மிரட்டி 7 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - கொடூர சம்பவம்! | Threatened And Molested For 7 Years Moms 2 Husband

இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாணவி அவரின் அம்மாவின் வயிற்றில் 5 மாத குழந்தையாக இருக்கும்போதுதான் வினோத் அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். மகள் போல் நினைத்து வளர்த்த பிள்ளையை சிறுமியான பிறகு அப்பாவின் ஸ்தானத்தில் இருக்கும் வினோத் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்ஸோவில் கைது

இந்நிலையில் வினோத் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவ அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.