நீதிமன்றம் சென்ற பிரீத்தி ஜிந்தா - பஞ்சாப் கிங்ஸ் அணியின் 11.5% பங்குகள் விற்பனை?
பஞ்சாப் கிங்ஸ் அணியின் 11.5% பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. அணி ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தொடர்ந்துபஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு மொத்தமாக பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, மோகித் பர்மன் மற்றும் கரண் பால் என்று 4 உரிமையாளர்கள் உள்ளனர். இதில் பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் தலா 23 சதவிகித பங்குகளையும், மோகித் பர்மன் 48 சதவிகிதம், கரண் பால் 6 சதவிகித பங்குகளை வைத்துள்ளனர்.
பங்குகள் விற்பனை
இதில், மோகித் பர்மனிடம் உள்ள 48 சதவிகித பங்குகளில் 11.5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனே, இதனை எதிர்த்து பிரீத்தி ஜிந்தாவின் ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் பஞ்சாப் அணியின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகித் பர்மன் தரப்பில் கைகளில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும் திட்டமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 11.5 சதவிகித பங்குகளின் மதிப்பு ரூ.540 கோடி முதல் ரூ.600 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.