'பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் போட்ட நபருக்கு நூதன தண்டனை - வைரலான வீடியோ!

Viral Video Pakistan Crime
By Sumathi Oct 23, 2024 05:53 AM GMT
Report

பாகிஸ்தான் வாழ்க எனக் கூறிய நபருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வாழ்க 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் பைசல் நிசார். இவர் சமூக வலைத்தள வீடியோ ஒன்றில் 'பாகிஸ்தான் வாழ்க' என்றும் 'இந்தியா ஒழிக' என்றும் கோஷம் எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக போலீஸில் புகாரளிக்கப்பட்டதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரூ.50 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு மற்றொருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் செல்ல அனுமதி வழங்கியது.

ஏமாற்றிய காதலன்.. நூதனமாக பழிவாங்கிய காதலி - என்ன செய்தார்?

ஏமாற்றிய காதலன்.. நூதனமாக பழிவாங்கிய காதலி - என்ன செய்தார்?

நூதன தண்டனை 

மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் நான்காவது செவ்வாய்க் கிழமைகளில் ஜபல்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, மூவர்ண தேசிய கொடியை வணங்கி, 21 முறை 'பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடைப்பிடித்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "யாரும் நாட்டிற்கு எதிராக பேச வேண்டாம். நான் தவறு செய்ததை ஏற்றுக்கொள்கிறேன். கோர்ட்டு உத்தரவை நான் கடைப்பிடிப்பேன்.

இனிமேல் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம் என மற்றவர்களிடமும் கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.