ஆபாச வீடியோ காட்டி மாணவிகளுக்குத் தொல்லை - ஆசிரியருக்கு செருப்பு மாலை!

Sexual harassment Child Abuse Crime
By Sumathi Sep 30, 2022 06:48 AM GMT
Report

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு ஊர் மக்கள் நூதன தண்டனை அளித்துள்ளனர்.

பாலியல் தொல்லை

ஜார்க்கண்ட், நோமுண்டி தொகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து 6 மாணவிகள் தங்களுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டியதாகவும்,

ஆபாச வீடியோ காட்டி மாணவிகளுக்குத் தொல்லை - ஆசிரியருக்கு செருப்பு மாலை! | Teacher Allegedly Shows Porn To Girls

தகாத முறையில் தொட்டதாகவும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஆசிரியர் மீது கிராம மக்கள் புகார் அளித்தனர். புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கிராம மக்கள் கூட்டம் நடத்தி தாங்களே அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர்.

நூதன தண்டனை

அதன்படி ஏராளமான பெண்கள் அந்த ஆசிரியரைப் பிடித்து அவரது முகத்தில் கருப்பு மையை தடவி, காலணிகளால் மாலை அணிவித்தனர். அதே கோலத்தில் அவரை படாஜம்டா பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது,

​​போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபரை சிறைக்கு அடைக்கக் கோரி போராட்டக்காரர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.