Porsche Car விபத்து; வழக்கில் சிக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்ற மருத்துவர்கள் - பின்னணி என்ன?
கடந்த வாரம் நடந்த போர்ஷே கார் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Porsche Car விபத்து
கடந்த வாரம் புனேவில் போர்ஷே காரை தொழிலதிபரின் மகன் ஒருவர் மதுபோதையில் அதிவேகமாக இயக்கி உள்ளான். அப்போது சாலையில் சென்ற பைக் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பைக்கில் பயணித்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதன் காரணமாக சிறுவன் கைது செய்யப்பட்டான். முதலில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அது சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது. தொழிலதிபரின் மகன் ஆகிய அவரை காப்பாற்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய சிறுவனைக் காப்பாற்ற டிரைவரை சரணடைய வைக்கச் சிறுவனின் குடும்பத்தினர் முயன்றுள்ளனர். டிரைவரிடம் சிறுவனின் குடும்பத்தினர் பெரும் தொகையைப் பணமாகத் தருவதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
காப்பாற்றும் மருத்துவர்கள்
அதில், 17 வயது சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் அவனிடம் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே சிறுவனைக் காப்பாற்ற அந்த இரத்த பரிசோதனை முடிவுகளை மாற்ற முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தான் இரண்டு மருத்துவர்களை இப்போது புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோல நடக்கும் என சுதாரித்த புனே போலீசார் விபத்து நடந்த சில மணி நேரத்திலேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் ரத்த மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். முதல் ரிப்போர்ட்டில் குளறுபடிகள் ஏற்பட்டால் இரண்டாவது மாதிரியை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்து இருந்தனர்.
போலீசார் எதிர்பார்த்தது போலவே ரத்தப் பரிசோதனை முடிவுகளில் குளறுபடியை ஏற்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன. இந்த விவகாரம் தற்போது மிகத் தீவிரமாகக் போலீசார் கையில் எடுத்துள்ளனர். குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கி தர எல்லாவிதமான முயற்சிகளும் போலீசார் தரப்பில் சேகரிக்கப்படுகிறது. இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.