கார் விபத்து 2 பேர் பலி - ஓட்டிய பணக்கார பையன் - கட்டுரை எழுது'னு ஜாமீன் கொடுத்த நீதிமன்றம் !!
கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பிற்கு காரணமான குற்றம் சம்பவத்தில் குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலரையும் அதிரவைத்துள்ளது.
கார் விபத்து
புனேவில் உள்ள கல்யாணி நகர் என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளம்பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் 17 வயது மைனர் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் வேதாந்த அகர்வால், பிரபல தொழிலதிபரான விஷால் அகர்வாலின் மகன். விஷால் அகர்வால் Brahma Realty and constructions நிறுவனத்தின் தலைவர் ஆவார். கைதான வேதாந்த அகர்வாலுக்கு வெறும் 15 மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் வைத்த அந்த நிபந்தனை தான் பலரையும் கேள்வி எழுப்பவைத்துள்ளது.
கட்டுரை
அதாவது, சாலை விபத்துக்கள் குறித்து 300 பக்க கட்டுரையும், சாலை விதிமுறைகள் தெரிந்து கொண்டு அடுத்த 15 நாட்களில் அவர், ரிப்போர்ட் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைனர் ஒருவர் கார் ஓடுவதே சட்டத்திற்கு புறம்பான விஷயம் என்பதை தாண்டி, அவர் 2 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ளார். அப்படியிருப்பவரை வெறும் கட்டுரை எழுதுங்கள் என கூறி ஜாமீனில் வெளியே விட்டுள்ள நீதிபதியையும், நாட்டின் நீதி துறையையும் பலரும் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.