விபத்தில் பலியான சின்னத்திரை நடிகை - பிரிவை ஏற்கமுடியாமல் தற்கொலை செய்த காதலர்
பவித்ரா ஜெயராம்
சின்னத்திரை நடிகையான பவித்ரா ஜெயராம் கடந்தசில நாட்கள் முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான இவர், தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரின் தெலுங்கு ரீமேக்கான Trinayani என்ற தொடரில் நடித்து வருகிறார்.
ஜோகாலி, நீலி, ராதாராமா போன்ற சின்னத்திரை தொடர்களிலும், ரோபோ பேமிலி என்கிற கன்னட படத்திலும் பவித்ரா ஜெயராம் நடித்துள்ளார். இவரின் மரணமே பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில், தற்போது அவரின் காதலரும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
திரியாயினி தொடரில் நடித்து வந்த பவித்ராவும், அதே சீரியலில் நடித்து வந்த சந்திரகாந்தும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவரும் பவித்ரா பயணித்த காரில் உடன் பயணித்துள்ளார்.
காதலர் தற்கொலை
அவர், இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், புதிதாக தெலுங்கு சீரியல் ஒன்றில் வாய்ப்பு வந்ததன் காரணமாக, தானும் பவித்ரா ஜெயராமும் பெங்களூரில் காரில் சென்ற நிலையில்,பேருந்து ஒன்றை முந்த முயன்றபோது, கார் பக்கவாட்டில் உரசிய நிலையில், பதற்றமடைந்த ட்ரைவர் வண்டியை உடனே திருப்பியதன் காரணமாக, சாலையின் டிவைடரில் கார் மோதியதாக தெரிவித்துள்ளார்.
இதில் தனக்கு மட்டும் கை மற்றும் தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்களுக்கு பெரிய அளவு காயம் ஏற்படவில்லை என கூறிய சந்திரகாந்த், தனக்கு ரத்தம் வந்ததை கண்ட பவித்ராவிற்கு அதிர்ச்சியில் மாரடைப்பு வந்த உயிரிழந்ததாக கூறினார்.
அவரின் நிலை தனக்கு பெரிய மனவருத்தத்தை உண்டாக்கியதாக தெரிவித்த சந்திரகாந்த், தானும் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.