Monday, May 12, 2025

விபத்தில் நொறுங்கிய கார் - மாரி தொடரில் நடிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை மரணம்

Accident Death Actress
By Karthick a year ago
Report

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் நேற்று(12-05-2024) நடைபெற்ற சாலை விபத்தில் காலமானார்.

சின்னத்திரை நடிகை

சோசியல் மீடியா காலமான தற்போது சினிமா நட்சத்திரங்களை போல, சின்னத்திரை நட்சத்திரங்களும் பெரும் பிரபலமானவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி சின்னத்திரை நடிகையாக பிரபலமாக இருந்தவர் நடிகை பவித்ரா ஜெயராம்.

telugu television actress pavithra jayaram death

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான இவர், தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரின் தெலுங்கு ரீமேக்கான Trinayani என்ற தொடரில் நடித்து வருகிறார். ஜோகாலி, நீலி, ராதாராமா போன்ற சின்னத்திரை தொடர்களிலும், ரோபோ பேமிலி என்கிற கன்னட படத்திலும் பவித்ரா ஜெயராம் நடித்துள்ளார். 

விபத்தில் 

தனது நடிப்பால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அவர், நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். ஆந்திராவில் காரில் குடும்பத்துடன் பயணித்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதிய நிலையில், உடனே பின்னால் வந்த பஸ்ஸுடனும் மோதியுள்ளது.

செய்வினை வெச்சாங்க - 136 தூக்க மாத்திரை சாப்பிட்டேன் - ஆனாலும் !! மோகினி பரபரப்பு பேட்டி

செய்வினை வெச்சாங்க - 136 தூக்க மாத்திரை சாப்பிட்டேன் - ஆனாலும் !! மோகினி பரபரப்பு பேட்டி

இரு அடுத்தடுத்த மோதலில் கார் நொறுங்கிய இருக்கின்றது. விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் மரணம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த மற்ற மூவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

telugu television actress pavithra jayaram death

பிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி, தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரை உலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.