செய்வினை வெச்சாங்க - 136 தூக்க மாத்திரை சாப்பிட்டேன் - ஆனாலும் !! மோகினி பரபரப்பு பேட்டி
1991-ஆம் ஆண்டு கேயார் இயக்கத்தில் உருவான படம் ஈரமான ரோஜாவே. மிக பெரிய ஹிட்டான இப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமாகினார் மோகினி. முதல் படமே பெரிய ஹிட் என்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன.
அவற்றில் புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற ஹிட் படங்களும் அடங்கும். மலையாளம், தமிழ் மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னடமொழி படங்களில் நடித்துள்ள அவர், ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமாரின் டான்சர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகினார்.
1999 ல் மோகினி, பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் குடியேறினார். இத் தம்பதியருக்கு, ருத்ராக்ஷ் மற்றும் அனிருத் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். பின்னரே தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள மோகினி, தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கதையை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில், எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் வர கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கெட்ட, கெட்ட கனவுகளும் வர ஆரம்பித்ததாக கூறினார். பேய் - பிசாசு கனவுகள் வந்ததாக கூறி அதன் காரணமாக தூக்கமும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த மோகினி, அப்போது ஒரு ஜோசியரை சந்தித்த போது அவர் தனக்கு செய்வினை வைத்து இருக்கிறார்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.
136 தூக்க மாத்திரைகளை
இதனை தானே தற்கொலை செய்து மரணமடைய வேண்டும் என்பதற்காக செய்துள்ளதாக அவர் கூறியதாகவும் தெரிவித்த மோகினி, அவர் சொன்னது போல, தனக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக வந்ததாகவும் தெரிவித்தார். அதன் பிறகு தான், ஒரு சிவாச்சாரியாரை சந்தித்து செய்வினை போன்ற விஷயங்கள் உண்மையா வினவிய போது, நல்லது இருக்கிறது என்றால், கெட்டதும் கண்டிப்பாக உள்ளது என அவர் தெரிவித்ததாக கூறி, அப்போது கடவுள் யார் என்று தேட ஆரம்பித்த நிலையில், கனவில் இயேசு வந்ததாக கூறினார்.
அவர் வந்த நாளில் இருந்து தான் விடுதலை கிடைத்தாக கூறி, மன நிம்மதி அடைய துவங்கியதாக கூறினார். மேலும் அப்பேட்டியில், ஒரு முறை தான் கையை அறுத்துக்கொண்டேன் என்றும் எலி மருந்தை கோக்கில் கலந்து குடித்தேன் என்றும் கூறிய மோகினி, கிட்டத்தட்ட 136 தூக்க மாத்திரைகளை அப்படியே சாப்பிட்டேன் என்றும் பேசியுள்ளார்.