யாரையும் முழுசா நம்பிறாதீங்க!! அப்படி என்ன ஆச்சு? மதுரை முத்துவின் 2-வது மனைவி வேதனை

Madurai Tamil Actors
By Karthick May 12, 2024 06:53 AM GMT
Report

மதுரை முத்து மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

மதுரை முத்து

சின்னத்திரையில் நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தவர் மதுரை முத்து. சின்னத்திரையில் துவங்கிய இவரின் பயணம் வெள்ளித்திரையிலும் பிரகாசமாக உள்ளது.

Madurai Muthu

திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளை என பிஸியாக இருக்கின்றார் மதுரை முத்து. குறிப்பாக, இவரின் தற்போதைய Property காமெடி பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது.

இவருக்கு லேகா என்பவருடன் காதல் திருமணம் நடந்த நிலையில், அவர் விபத்து ஒன்றில் சிக்கி காலமானார்.

யாரையும் முழுசா

இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதனை தொடர்ந்து பெண் பிள்ளைகளுக்காக திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. முதல் மனைவி லேகாவின் தோழியான மருத்துவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. இந்த தம்பதிகள் தற்போது 2 பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

50 வயசிலும் திருமணம் பண்ணல - அவரோட ரொம்ப பாசமா இருந்தேன்..அவருக்கு அப்புறம்!! சித்தாரா

50 வயசிலும் திருமணம் பண்ணல - அவரோட ரொம்ப பாசமா இருந்தேன்..அவருக்கு அப்புறம்!! சித்தாரா

ஆனால், அண்மைகாலமாக சமூகவலைத்தளங்களில் நீத்து எதிர்மறையான சில பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். வருத்தத்துடன் அவர் இருக்கும் பல பதிவுகள் வெளிவந்துள்ளன.

Madurai Muthu with his 2nd wife

அண்மையில் மருத்துவமனையில் இருப்பது போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதில், யாரையும் முழுவதுமாக நம்ப வேண்டாம் என்றும், தான் பலருக்காக பல முறை இறங்கி வந்திருப்பதாகவும், பலருக்காக பேசி இருப்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.