கோர விபத்து: அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள் - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Bengaluru Accident
By Sumathi Nov 21, 2022 06:29 AM GMT
Report

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தது.

கோர விபத்து

புனே-பெங்களூரு இடையே உள்ள நெடுஞ்சாலையில், ட்ராக் ஒன்று நாவலே பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது பிரேக் செயலிழந்ததால் நிலை தடுமாறியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் அருகே இருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோர விபத்து: அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள் - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்! | 40 Vehicles Damaged At Pune Bangalore Highway

இந்த விபத்தின் போது, சாலையில் எண்னெய் கசிந்து வழுக்கும் தன்மையுடையதாக மாறியது. இதனால் சாலை வழுக்கி மேலும் சில வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதில், 48 வண்டிகள் விபத்துக்குள்ளானது.

வாகனங்கள் சேதம்

மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தீயணைப்புப் படையினர், காவல்துறை பணியாளர்கள் மற்றும் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தினால், சுமார் 2 கி.மீ., நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.