வேலைக்குக் சென்ற பெண் காவலர்..கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்!
பெண் காவலர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண் காவலர்
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்பவர் (வயது 28) பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது விமலா நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் காலை வழக்கம் போல் பள்ளத்துப்பட்டியிலிருந்து, வேலைக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் விமலா சென்று கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக விமலா மீது மோதியது.
உயிரிழந்த சம்பவம்
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .