தடுமாறிய லாரி..சாலையில் சிதறிய உடல்கள் - அதிகாலையில் நடந்த கோர விபத்து!
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா
கேரள மாநிலம் திருச்சூரில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்திற்கும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் சாலைப்பணி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு இருந்த 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து
இந்த சம்பவம் அதிகாலையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த சமத்துவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் 5 பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர் .
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை காவல்துறை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.