சுப்ரீம் கோர்ட்டை சுற்றிப் பார்க்கணுமா? இதோ அரியவாய்ப்பு!
உச்ச நீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டை நெருக்கமாக பார்க்கவும் வழிவகுக்கும் வகையில், பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சனிக்கிழமைகளில் உச்சநீதிமன்ற வளாகத்தை அதிகாரிகளின் உதவியோடு சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுமக்களுக்கு அனுமதி
2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள், மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற சனிக்கிழமைகளில் பொதுமக்கள் உச்சநீதி மன்ற வளாகத்தை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.
இதற்கு https://guidedtour.sci.nic.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.