ஒரே பாலின திருமண அங்கீகாரம் - உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
ஒரே பாலின திருமண அங்கீகாரம் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒரே பாலின திருமணம்
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 2018ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரே பாலின ஜோடிகள் பரஸ்பர சம்மத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் திருமணம் செய்வதற்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க முடியாது என்று கடந்த 2023 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றம் மறுப்பு
மேலும், இதற்கு அங்கீகாரம் வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரே பாலின ஜோடிகள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை. இந்த வழக்கில் தலையிட தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    