OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அறை இல்லை - புதிய விதிமுறைகள் என்ன?
ஓயோ புதிய செக்-இன் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
OYO
இந்திய ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் ஓயோ. தங்களுடைய செக்-இன் கொள்கைகளில் மாற்றம் அறிவித்துள்ளது. அதன்படி, ஓயோ அறையை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் ஜோடிகள்,
முன்பதிவு செய்யும் போதும், அறையில் வந்து தங்கும்போதும் (Check-in.) தங்களுடைய திருமண உறவை உறுதி செய்யும் வகையில் உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
திருமணமாகாத ஜோடிகளை தங்கள் விடுதியில் தங்க அனுமதிக்கலாமா இல்லையா என்பதை அதன் கூட்டாளி ஹோட்டல்கள் முடிவு செய்யும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை மட்டுமே அடையாள சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.
விதிமுறைகள்
பான் கார்டில் முகவரி இல்லாததால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. அறையில் தங்க வரும்போது அடையாள அட்டையின் அசல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அறையை முன்பதிவு செய்பவரின் வயது குறைந்தது 18 ஆக இருக்க வேண்டும்.
அறையில் வந்து தங்கும்போது, அறையை முன்பதிவு செய்தவர்கள் தற்போது செல்லுபடியாகும் புகைப்படம் கொண்ட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
இது தற்போது உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நகரங்களிலும் இந்த கொள்கைகளை விரிவுபடுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.