பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு - கலெக்டர் அறிவிப்பு

India Begging Money Madhya Pradesh
By Karthikraja Jan 06, 2025 05:30 PM GMT
Report

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 வெகுமதிவழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பிச்சைக்காரர்கள்

பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில் பகுதிகளில் வறுமை காரணமாக சிலர் யாசகம் பெறுவதை காண முடியும். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.  

beggers reward indore

இந்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் மூலம் இந்தூர் உள்ளிட்ட 10 இந்திய நகரங்களை பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பிச்சை போட்டால் சிறையா? இந்தியாவின் முக்கிய நகரில் வரும் அதிரடி மாற்றம்

பிச்சை போட்டால் சிறையா? இந்தியாவின் முக்கிய நகரில் வரும் அதிரடி மாற்றம்

பிச்சை எடுக்க தடை

இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மாவட்டத்தில், பிச்சை எடுப்பதும் பிச்சை போடுவதும் தடை செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 

beggers in indore

இந்த கட்டுப்பாடானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பிச்சை கேட்பவரோ அல்லது கொடுப்பவரோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

ரூ.1000 பரிசு

இந்நிலையில் பிச்சை கேட்பவர் அல்லது பிச்சை வழங்குவது குறித்து தகவல் தெரிவித்தால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகவல் கொடுக்க செல்போன் எண்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

indore collector ashish singh

இந்த எண்ணிற்கு 200க்கும் மேற்பட்டோர் அழைத்து தகவல் அளித்ததாகவும், அதை விசாரித்ததில் 12 பேர் கூறிய தகவல் மட்டுமே உண்மை என்பதால் அதில் 6 பேருக்கு ரூ.1000 வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்துள்ளார்.