ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை.. ராகிங் பெயரில் கொடுமை செய்த சீனியர்ஸ்!

Coimbatore Crime
By Vinothini Nov 08, 2023 04:55 AM GMT
Report

 பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.n

கல்லூரி

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பட்ட படிப்பும் உள்ளது. இதில் பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

psg-college-seniors-arrested-for-ragging-juniors

இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ராகிங் செய்துள்ளனர். அதில் அவர்கள் குடிப்பதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் மறுத்ததும் ஆத்திரமடைந்த சீனியர்ஸ் அந்த முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை.. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு!

ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை.. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு!

புகார்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

psg-college-seniors-arrested-for-ragging-juniors

மேலும், இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பீளமேடு போலீஸார் மாதவன், மணி, வெங்கடேசன், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர், அவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.