கவர்னரை எதிர்த்து போராட்டம்.. கருப்பு கொடி காட்டி புறக்கணிக்கும் மக்கள் - பரபரப்பு!

R. N. Ravi Governor of Tamil Nadu Madurai
By Vinothini Nov 02, 2023 07:32 AM GMT
Report

கருப்பு கொடி காண்பித்து கவர்னரை மக்கள் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் வருகை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்கு தமிழக கவர்னர் விமானத்தில் புறப்பட்டு இன்று காலை மதுரைக்கு வந்தார்.

கவர்னரை எதிர்த்து போராட்டம்

இந்த பட்டமளிப்பு விழாவில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நூற்றாண்டை கடந்தவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18 மற்றும் செப்டம்பர் 20-ம் தேதிகளில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அதனை ஆளுநர் நிராகரித்தார், இதனால் உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இல்லத்தரசிகளுக்கும் தீபாவளி போனஸ்.. முன்கூட்டியே வரும் உரிமை தொகை - எப்போ தெரியுமா?

இல்லத்தரசிகளுக்கும் தீபாவளி போனஸ்.. முன்கூட்டியே வரும் உரிமை தொகை - எப்போ தெரியுமா?

போராட்டம்

இந்நிலையில், கவர்னருக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்புக்கொடிகளை உயர்த்தினர், இதனை போலீசார் தடுத்து நிறுத்தினார்.

கவர்னரை எதிர்த்து போராட்டம்

இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், அதில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட வேண்டும்.

மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதை கைவிட வேண்டும், மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 பேருந்துகளில் ஏற்றி அழைத்து சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.