பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி : காங்கிரஸ் கட்சி முடிவு
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அவர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் வருகை
நாளை தமிழ்நாடு வர உள்ள பிரதமர் மோடி , சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையினை தொடங்கி வைக்கிறார், அதன் பிறகு சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கின்றார். பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

கருப்பு கொடி போராட்டம்
அதன்படி நாளை தமிழகத்தில் பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் கருப்பு கொடி காட்டுவதற்கு ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது , அதே சமயம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக குற்ற்சாட்டுகளை முன்வைத்து கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி, அவர் செல்லும் இடஙக்ளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயண விவரங்கள் தற்போதும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil