இல்லத்தரசிகளுக்கும் தீபாவளி போனஸ்.. முன்கூட்டியே வரும் உரிமை தொகை - எப்போ தெரியுமா?
மகளிர் உரிமை தொகை இந்த மாதம் முன்கூடியே வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. n
உரிமை தொகை
தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்தும் வறுமையான குடும்பத்தை சார்ந்த பலருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படவில்லை.
முன்கூட்டியே வரவு
இந்நிலையில், மகளிர் உரிமை தொகை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது. அதனால் எல்லா மாதமும் 15ம் தேதி வரவு வைக்கப்படும். ஆனால் கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதி வைக்கப்பட்டது. அதேபோல் இந்த முறை தீபாவளி 12ம் தேதி வருகிறது.
இதை மனதில் வைத்து பெண்களின் தேவையை கருதி 10 - 9 தேதிகளில் பணம் போடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டதட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்து வருகிறார்கள்.