விஜய்யை அசிங்கப்படுத்தவில்லை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா மோகன்
விஜய் குறித்து பரவிய வதந்திக்கு பிரியங்கா மோகன் விளக்கமளித்துள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன்
தமிழில் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன். அந்தப் படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரதர் படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில்
"எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினால் அதில் பவன் கல்யாணைத்தான் நடிக்க வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரியங்கா,
குஷி 2
"சரிபோதா சனிவாரம் படத்தின் நிகழ்ச்சியில் நான் பேசியதை பலரும் தவறாக புரிந்துகொண்டார்கள். இப்போது நான் பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி படத்தில் நடித்துவருகிறேன். அதனால் அன்று மேடையில் ஏறியதும் ஓஜி என்று கத்த ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யாவும் இருந்தார்.

ஏற்கனவே குஷி 2 படத்தில் பிரியங்காவைத்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அது அப்போது நியாபகம் வந்தது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இருந்ததால்தான் குஷி 2 படத்தில் பவன் கல்யாண் நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால் உண்மையில் நான் முதலில் பார்த்தது விஜய் நடித்த குஷி படத்தைத்தான். அந்தப் படத்தைதா பார்த்துவிட்டு நான் விஜய் ரசிகர் ஆகிவிட்டேன். விஜய்யின் நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். அதுவே அன்று நான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்திருந்தால் விஜய் என்றுதான் சொல்லியிருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் IBC Tamil