தனுஷுடன் அப்படி நடிக்கனும்; அதுதான் பிடிக்கும் - மனம் திறந்த பிரியங்கா மோகன்!
நடிகர் தனுஷ் குறித்து பிரியங்கா மோகன் மனம் திறந்துள்ளார்.
பிரியங்கா மோகன்
கன்னடத்தில் வெளியான ஒந் கதே கெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதையடுத்து தெலுங்கில் 'கேங் லீடர்', 'ஸ்ரீகரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின், தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களின் மூலம் பிரபலமானார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து விட்டார். தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லரில், ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
கேப்டன் மில்லர்
அண்மையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய அவர், Finally, 'Killer Killer, Captain Miller' நான் உங்களோட பெரிய ரசிகை தனுஷ் சார். இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. தனுஷ் சார் பாடுறது பிடிக்கும், அவர் பாடினா இளையராஜா சார் பாடுற மாதிரி இருக்கும்.
அதேபோல் புதுப்பேட்டை மாதிரியான அக்ஷன் படமா கேப்டன் மில்லரில நடிச்சாச்சு. அதனால் இனி காதல் கொண்டேன் மாதிரியான படத்தில் தனுஷுடன் நடிக்க வேண்டும்.
அவர் தாடி லுக் தான் தனக்கு பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் செல்வராகவன் சார் படத்துல தனுஷ் ஜோடியா நடிப்பேன் என கூறியுள்ளார்.